அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

டிவிட்டரில் படித்த ஒரு வரி: “வயதாக வயதாக தீபாவளி சுவாரஸ்சியம் குறைந்து கொண்டே போகிறது.”

உண்மை தான் போலும். சின்ன வயதில் தீபாவளி என்றால் ஒரு புதுவித சந்தோஷமும் உற்சாகமும் இருக்கும். ஆனால், வயதாக வயதாக, “அப்பாடா! வேலைக்கு போக தேவையில்ல. நல்லா தூங்கலாம்” என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது.

தீபாவளி அன்று கோயிலுக்கு போவது நன்று. ஆனால், கூட்டம் நெரிசலில் அந்த கடவுளுக்கே அங்க இடமில்லை என்பது போல் ஒரு கூட்டம் அலைமோதும் கோயில்களில். இருந்தாலும், வழிபாடு செய்துவிட்டு கோயில் விட்டு வெளியே வரும்போது அடுத்த தீபாவளியே வந்துவிடும்.

நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்று- உணவு. காலை உணவுக்காக அம்மா சுட்ட இட்லிக்கும் மட்டன் குழம்புக்கும் தனி ருசி தான் போங்க!! மதிய உணவுக்கு கண்டிப்பா கோழி பிரியாணி இருக்கும். சமையலில் வந்து உதவுமாறு அம்மா கெஞ்சுவார். “இனி தீபாவளி அன்னிக்கு ஆர்டர் கொடுத்துவிடுவோம். எல்லாருமே freeya இருக்கலாம்” என மன்றாடுவேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இதே பஞ்சாயத்து தான்!

தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப்படும். கல் தோன்றி மண் தோன்றாத காலத்திருந்தே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இயங்கி கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதில் ஏதேனும் ஒரு தலைப்பை ஒட்டி பேசுவார்கள். அதை ஆர்வத்துடன் உட்கார்ந்து அப்பா பார்ப்பார்.

விளம்பரங்களுக்கு இடையே நான் ஏதேனும் நிகழ்ச்சி பார்க்க ஆசைப்பட்டால், தங்கை வந்து குறிக்கிட்டு சண்டை போடும். இங்கேயே ஒரு பட்டிமன்றம் நடக்கும்.

பொறுப்பான அக்கா, அண்டை வீட்டார்களுக்கு பலகாரம் கொடுப்பார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. பக்கத்து வீட்டார், சீனர்கள் என்பதால் அவர்கள் வழக்கப்படி “Hongbao“ கொடுப்பார்கள். தமிழில் சொல்வது என்றால் மொய் என்று கூட சொல்லலாம். அதற்காகவே அதிக அளவான பொறுப்பு தென்படும் அக்கா கண்களில்.

மதியம் ஆகிவிட்டால், தீபாவளி சிறப்பு தூக்கம் ஒன்று வரும் பாருங்களேன்! அதில் மூழ்கி முக்குளித்து எழ சாயுங்காலம் ஆகிவிடும். மதிய உணவை நினைவில் வைத்து கொண்டு, அன்று சாயுங்காலம் கண்டிப்பா உடற்பயிற்சி செய்வேன். அன்று இன்னும் கூடுதல் உடற்பயிற்சி செய்யும் கட்டாயம் இருக்கும்.

உடற்பயிற்சி செய்து வீட்டிற்கு வந்தால், அத்தை கொண்டு வந்த கோழி குழம்பு என்னை இழுக்கும். ஆக கடைசியில், எல்லா தீபாவளிக்கு வெற்றி பெறுவது, கோழி பிரியாணியும், குழம்பும் தான்.

கோழி – 1, நான் – 0

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s