முதன் முதலான சந்திப்பில்
பார்வையிலேயே குறிவைத்தாய்;
என்னை வீழ்த்த
நீ புரிந்த
முதல் குற்றம்.

உரையாடிய தருணங்களுக்கு மத்தியில்
ஒருவரினொருவருடைய
மன நிம்மதியை
பறித்துக்கொண்டோம்;
இருவரும் கூட்டாக
செய்த குற்றம்.

குற்றங்களின் நீட்சியாக
உணர்ச்சி மிகுதியிலான
வார்த்தைகளையும்
ஸ்பரிசங்களையும்
உன்னிடம் தொலைத்தேன்;
நானறிந்தே
செய்த குற்றம்.

அனைத்தும் உன்மத்தமென்று
சரணடைந்த பிறகு
என்னுள் இருக்கும் உன்னையும்
சேர்த்தே நிராகரிப்பது
எவர் குற்றமாயிருப்பினும்

தண்டனை
இருவர்க்கும்தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s