வழி மறைத்து கொண்டிருந்தவனைத் திட்ட எண்ணினார் திருமதி கணேசன். “ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டு ஓர் ஓரமாகச் விலகிச் சென்றார். ஆனால், அவரை மீண்டும் வழி மறைத்தான் சங்கர்.

“ ஆசிரியை! என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான் சங்கர். அவன் குரலில் அளவற்ற ஆனந்தம் நிறைந்திருந்தது. சிறிது நேரம் அவனையே  உற்றுப் பார்த்தார் திருமதி கணேசன். கதிரவனைக் கண்ட தாமரையைப் போல அவருடைய முகம் மலர்ந்தது. தொலைந்த பொருளைக் கண்டெடுத்த சிறுமியைப் போல் புன்முறுவலிட்டார்.

“ டேய் ரூபன்!! மணம் புரிந்ததும் அம்மாவை மறந்துவிட்டாயா?”  என்று கண்களில் நீர் ததும்ப தழுதழுத்த குரலில் சங்கரைப் பார்த்துக் கேட்டார். சங்கர் குழப்பத்தில் விழித்தான். “ஒருவேளை தவறான ஒருவரிடம் தான் பேசுகிறேனோ?” என்று  எண்ணி அவரை மீண்டும் உற்றுப் பார்த்தான். “இல்லை, இல்லை. இது அவரே தான்,” என்று அவனுடைய மனம் உறுதியாக நம்பியது.

அன்பின் சாரமாக விளங்கிய இவரை மறப்பது கடினமான ஒரு செயலாகும். தன் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த காலங்களில் ஒளியாக வந்து தனக்கு ஒரு பாதையை வகுத்த இவரை சங்கர் பெரிதும் மதித்தான். தொடக்கப்பள்ளி முடிந்தவுடன் தன் தாயாருடன் வெளியூருக்குச் சென்ற சங்கர் மீண்டும் சிங்கபூருக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரைத் தேடாத இடங்களே இல்லை.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு அஸ்திவாரத்தை அமைத்து தந்த திருமதி கணேசனைக் காண வேண்டும் என்று சங்கர் ஒவ்வொரு நாளும் ஏங்கினான். தொடக்கப்பள்ளி நான்கில் தன் பெற்றோரின் பிரிவினால் படிப்பில் நாட்டம் இல்லாமல் போன சங்கர், கோபம் என்னும் போர்வையில் தன் துக்கத்தைச் மூடி மறைத்தான். இதனால், பள்ளியில் யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை- திருமதி கணேசனைத் தவிர. அவனுடைய மனக் குமுறல்களை அவர் நன்கு உணர்ந்தார். அக்குமுறல்களை அவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஆயதங்களாக மாற்றி அமைத்தார்.

இரவும் பகலும் பாராது அவனுடைய வாழ்க்கையை மெழுகேற்றவே தன்னை வறுத்திக்கொண்டார். அவரைப் பலமுறை அவன் துச்சப்படுத்தினான். ஆனால், அவர் அதை பெரிதுப்படுத்தினதே இல்லை. ஞான ஒளியூட்டிய இந்த ஆசானுக்கு அவன் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே என்ற ஆதங்கம் அவன் மனதில் பல வருடங்கள் உறுத்திக்கொண்டிருந்தது. ஆனால், அவ்வுறத்தல் இன்றோடு முடிந்தது என நம்பிக்கையோடு இருந்தான்.

“பாட்டி…….!” என்று கீச்சிட்டு வந்த மழலையின் குரல் அவன் எண்ண அலைகளை சிதைத்தது.

“இங்கே என்ன செய்றீங்க? வாங்க போகலாம்” என்று அதட்டிக்கொண்டு அவள் தன் பாட்டியின் கைகளை இறுக்கிப் பிடித்தாள். அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவள் சங்கரைப் பார்த்து “ என் பாட்டியைக் கண்டுபிடித்ததுக்கு நன்றி அண்ணா. என் பாட்டிக்கு மறதி நோய். இப்படித்தான் அடிக்கடி காணாமல் போவார்,” என்று சொல்லிக்கொண்டே திருமதி கணேசனை அழைத்துச் சென்றாள்.

உருகி வழிந்தாலும் ஒளி தரும் மெழுகுவத்தியைப் போல் விளங்கிய திருமதி கணேசனிடம், தானும் ஓர் ஆசிரியராகிவிட்டதை கூற முடியாத ஏமாற்றத்தை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஞாபகம் இழந்தும் ஞான ஒளியில் வாழ்கிறார் அவனுடைய ஆசிரியர் – திருமதி கணேசன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s