தை திருநாள்

தமிழ் மாதத்தில் வருகின்ற தை முதல் நாளே தை திருநாளாகவும் பொங்கல் திருநாளாகவும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த பொங்கல் திருநாள், எல்லா உயிர்களும் இப்புவியில் நலமுடனும் வளமுடனும் வாழ அருள் செய்கின்ற ஆதவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக அமைகிறது.

இத்திருநாள் நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகின்றது. தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகின்றது. அன்று பழையன(நம்முடைய தீய குணங்கள் மற்றும் நம்மில் மாற்றிக் கொள்ள வேண்டிய செயல்கள்) கழிந்து, புதியன (புதிய நல்வாழ்வு) மேற்கொள்ளும் நாளாகப் போற்றப்படுகின்றது.

மறுநாள் பொங்கல் திருநாள். சூரிய ஒளி இல்லையென்றால் நாம் உண்ணும் உணவும் நம் வாழ்வும் மங்கிவிடும். நாம் உயிர் வாழ்வதற்கு சூரிய ஒளி ஒரு மூல காரணம். உழவர்கள் ஆதவனின் ஒளியை மையமாக வைத்தே அவர்களுடைய உழவுத் தொழில் நடத்துகின்றனர். அதனாலேயே உயிர் ஒளி தருகின்ற சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக அமைகின்றது இந்த சூரியப் பொங்கல். இந்த நாள் ‘மகர சங்கராந்தி’ என்று மற்ற மானிலங்களில் கொண்டாடப்படுகின்றது.

தை பொங்கல் மறுநாள் மாட்டுப் பொங்கல் என அழைக்கப்படுகின்றது. உழவர்களுக்கு தங்கள் அறுவடை காலத்தில் உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கல். நான்காவது நாள் காணும் பொங்கல். கன்னிப் பெண்கள் பொங்கல் இட்டு மகிழ்விக்கும் திருநாள்.

இவ்வாறாக பண்டைய தமிழர்கள் முதல் இன்றைய தமிழர்கள் வரை இத்திருவிழாவை தம்முடைய சுற்றத்துக்கும் சுற்றுபுறத்துக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக போற்றி கொண்டாடுகிறார்கள்.

தைப்பூசம்

தைப்பூசம் தை மாதத்தில் பூச நக்ஷ்திரத்தில் கந்தவேல் பரமனுக்கு காவடி எடுத்து கொண்டாடும் ஒரு திருவிழா. குன்றுதொராடும் குமரனுக்கு பக்தர்கள் அபிஷேக பொருட்களைக் காவடியில் சுமந்து மலையேறி அவனுக்கு அபிஷேகம் செய்து கண்டு மகிழ்வர்.

நாம் தைப்பூசம் கொண்டாடுவதற்க்கு ஒரு புராணக் கதையும் உண்டு. ஆயிரத்தெட்டு அண்டத்தை நுற்றியெட்டு யுக காலம் ஆண்ட சூரபத்மனையும் அவனுடைய தம்பிமார்களையும் அழிப்பதற்காகப் பரமனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினான் முருகப்பெருமான்.

கந்தவேல் போர் கோலம் பூண்டு அசுரர்களை அழிப்பதற்காக சிவசக்தியிடமிருந்து ஞான வேலைப் பெற்று தாரகாசூரனை (சூரபத்மனின் தம்பி) வதம் செய்த நாளே நாம் தைப்பூசமாகக் கொண்டாடுகிறோம்.

திரைக்கடல் ஓடி திரவியம் தேடிய தமிழர்கள், தங்களுடன் முருக வழிபாட்டையும் அவர்களுடன் எடுத்துச்சென்றனர். அதனாலேயே தமிழர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் இன்றளவும் தைப்பூசம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் உள்ள பத்து மலையிலும் மற்றும் தண்ணீர்மலையிலும் கொண்டாடப்படுகின்ற தைப்பூசத் திருவிழா உலகப் புகழ்ப் பெற்றது. நமது சிங்கை திருநாட்டிலும் தைப்பூசத் திருவிழா இரண்டு நாட்கள் உற்சவமாக கொண்டாடப்படுகின்றது.

அஞ்ஞானத்தை அகற்ற வந்த ஞான பெருங்கடலாம் நம் முருகப்பெருமானை வணங்கித் தொழுது பேரானந்த பெரு வாழ்வு வாழ வழி வகுக்க அவனின் சரணங்களைப் பற்றி இறைஞ்சுவோம்.

ஞான பண்டிதனுக்கு அரோஹரா!!!!

கந்தவேல் பரமனுக்கு அரோஹரா!!!

  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s