தமிழ் புத்தாண்டு எனும் சித்திரை வருடப் பிறப்பு சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்கு சஞ்சரிக்கும் நாளன்று கொண்டாடப்படுகின்றது. அன்று மலையாலிகளும் விஷு கனி என்று புது வருடத்தை வரவேற்கிறார்கள்.

தமிழர் ஆண்டுகள் ஏன் 60 ஆண்டுகால சுழற்சியில் கணக்கிடப்படுகின்றன?

வியாழ கிரகம் உலகத்தைச் சுற்றி வர 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. அதே போல், சனி கிரகம் உலகத்தைச் சுற்றி வர 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது.  அப்படி வியாழனும் சனியும் மறுபடியும் சந்தித்துக் கொள்ள சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. இதன் காரணமாகவே தமிழர் ஆண்டுகள் 60 வருடகால் சுழற்சியில் கணக்கிடப்படுகின்றன.

ஒரு ஆண்டு, சித்திரை மாதத்தில் துவங்கி பங்குனி மாதத்தில் முடியும். 12 மாதங்கள் இவ்வரிசையில் வரும்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி. பத்தாவது மாதமான தை மாதம், ஆங்கில நாள்காட்டியின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் நடுவில் (14th/15th) துவங்கும்.

ஏன் வியாழனையும் மற்றும் சனியையும் மட்டும் வைத்து வருடத்தை கணக்கிடுகிறார்கள்?

இந்த இரண்டு கிரகங்கள் தான் நாம் வாழ்கின்ற உலகத்தின் பருவநிலையை நிர்ணயிக்கின்றன. இதன் காரணத்தாலேயே அவ்விரண்டு கிரகங்களை வைத்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள்.

இந்த கனிப்புகளையும் மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பையும் வைத்தே வருகின்ற புதிய ஆண்டு எப்படி அமையும் என்று நம் ஜோதிட வல்லுனர்களால் கணித்து கூற முடியும். இயற்கை பேரிடர், பருவநிலை மாற்றம், நாட்டின் வளர்ச்சி மற்றும் பல வகையான உலகச் சார்ந்த விஷயங்களைப் பற்றி அந்த புதிய ஆண்டின் குறிப்புகளின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இப்படியாக வருகின்ற ஆண்டு நமக்கு அணுகுலமாக அமையுமா இல்லையா என்று முன்னதாகவே தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்பது?

தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் பூஜை அறையில் முதல் நாளன்றே வைக்கப்பட்ட மங்களப் பொருட்களைக் – கண்ணாடி, வெள்ளி/தங்கம்,  காய்கறிகள், பணம் – கண்டு அந்த நாளைத் துவங்குவர். வருகின்ற ஆண்டில் அவர்கள் வாழ்வு, பொங்கும் மங்கலத்துடன் விளங்குவதற்காக இப்படி பல மங்களப் பொருட்களைத் தரிசனம் செய்து துவங்குகிறார்கள். வருகின்ற ஆண்டை நாமும் நம் சுற்றதாருடன் சேர்ந்து இறைவனைத் தொழுது கொண்டாடி வரவேற்ப்போம்.

தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த துர்முகி ஆண்டு நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s