சஷித்தாவிற்கு காலை முதல் கைகள் பயத்தால் நடுங்கி கொண்டிருந்தன. மூன்று-மாடி வீடாக இருந்தபோதிலும், இடம் நெரிசலாக இருந்தது. வீடு முழுதும் உறவினர்கள் கூட்டமும் சத்தமும் நிரம்பியிருந்தன. அலங்காரம் ஒரு புரம் நடந்தது, பலகாரம் ஒரு புரம் நடந்தது.

சஷித்தாவிற்கு பயம்.

சஷித்தா மோகனுக்கு குறுந்தகவல் அனுப்பினாள் – ‘ஏதாச்சு பண்ணு? எனக்கு பயமா இருக்கு. கல்யாணத்த நிறுத்து. நான் உன்னைய பாக்கனும்.’ விறுவிறு என்று குறுந்தகவல் அனுப்பினாள் விரல் நடுக்கத்தால் தவித்திருந்தபோதிலும்.

அறைக்குள் நுழைந்த அம்மா, “சஷி, சீக்கிரம் டி. ரெடியாகு. பூஜைய ஆரம்பிக்க போறாங்க.” அவசரப்படுத்தினார். ஒவ்வொரு விஷயமும் மும்முரமாக நடக்க, அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது. கல்யாணத்தை தானே நிறுத்திவிடலாமா என்று நினைத்து சஷி, “அம்மா….உங்ககிட்ட…நான்…” என்றாள்.

அம்மா, “என்ன? சொல்லு.”

அம்மாவை ஒரு முறை பார்த்தாள் சஷித்தா.

அம்மா மறுபடியும், “என்ன டி? சொல்லு!” அலமாரியில் இருந்த சேலையை எடுத்தாள்.

சஷித்தாவிற்கு பயம் உடம்பெல்லாம் பரவியது. சஷித்தா, “ஒன்னுமில்ல.” பயம் அவளை பேசவிடாமலும் தடுத்தது.

அம்மா, “சரி சரி. ரெடியாகு சீக்கிரம்.” என்று சொல்லிவிட்டு அறை கதவை மூடிவிட்டு சென்றாள். கதவை மூடிவிட்ட மறு வினாடி, ஓடி போய் மெத்தையில் உட்கார்ந்து தலையணை கீழ் ஒளித்து வைத்திருந்த கைபேசியை எடுத்து பார்த்தாள்.

மோகனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவளுக்கு கோபமும் அழுகையும் ஒரே நேரத்திலும் வந்தது. கண்கள் சற்று குளமாகின. கண்களை துடைத்து கொண்டு சேலையை கட்டினாள். அம்மா அதற்குள் கதவை கடன்காரன் தட்டுவதுபோல் அதிரடியாய் தட்டி, “ஹேய் என்னடி பண்ணுற? சீக்கிரம் வா.”

சேலையை சரியாக கட்ட முடியாமல் நின்று கொண்டிருந்த சஷித்தா, “இது சரியா வரமாட்டேங்குது!”

அம்மா நக்கலாய் சிரித்து கொண்டே, “ஐயோ ஐயோ!இதகூட கட்ட தெரியல….”

எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். இப்போது ஒரு எரிச்சல் கலந்த பயம் உண்டாகியது. நேராககூட நிற்காமல் அலச்சியமாய் நின்றாள் சஷித்தா. மெத்தையில் கிடந்த கைபேசியை சற்று எட்டி பார்த்தாள். மறுபடியும் ஏமாற்றம்.

அம்மா, “சரி சரி…இப்ப நல்லா இருக்கு. வா!” என்று சஷித்தாவை அழைத்து சென்றாள் பூஜை இடத்திற்கு. கூடி நின்ற அனைவரும் விளையாட்டாய் கிண்டலடித்தனர். புகைப்படம் எடுத்தனர். அவளுக்கு ஏதோ போல இருந்தது. கண்களிலிருந்து வழிய துடிக்கும் கண்ணீரை கஷ்டப்பட்டு தடுத்தாள்.

வீடியோ எடுத்து கொண்டிருப்பவர், “யம்மா பொண்ணு, கொஞ்சம் வெட்கப்படுற மாதிரி சிரிங்க.” கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் கலகலப்பாய் சிரிக்க, சஷித்தாவிற்கு மட்டும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் அவளைவிட்டு பிரிந்து போவதுபோல் உணர்ந்தாள். லேசாக மயக்கம் வந்தது.

மாப்பிள்ளை வீட்டார் அங்கே இருந்தனர்.நடக்க வேண்டிய பூஜைகள் முடிந்தன. ஒரு நொடி கூட, சஷித்தா சந்தோஷமாக இல்லை. புகை, கூட்டம், அதிக சத்தம் என அவளை மேலும் எரிச்சல் ஊட்டின. அங்கே அமைதியாய் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையிடம் உண்மையை போட்டு உடைக்கலாம் என தோன்றியது அவளுக்கு. கூடியிருந்த கூட்டம் அவளுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை.

அறைக்குள் சென்று பார்த்தால், ஒரு குழந்தை பட்டாளமே விளையாடி கொண்டிருந்தது. அவளுக்கு சற்று ஓய்வு எடுக்க வேண்டும என தோன்றியது. குழந்தைகளை வெளியே போகுமாறு சொன்னாள். யாரும் கேட்காமல் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த சித்தி, “யம்மா சஷி, பாப்பாவ பாத்துக்கோ” என்று கூறிவிட்டு கை குழந்தையை சஷித்தாவிடம் கொடுக்க, அவள்

“சித்தி, ப்ளீஸ்!! எல்லாரையும் வெளியே போக சொல்லுங்க. நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் பண்ணனும்?”

சித்தி கிண்டலாய் சிரித்து கொண்டே, “இதுக்கே இப்படினா? கல்யாணம் நைட் எப்படி?” என்று கண் அடித்தபடி பிள்ளைகளை வெளியே போக சொன்னார். ஒரு வழியாக அனைவரும் வெளியே சென்றனர். மெத்தையில் படுத்தாள். ரொம்ப யோசித்தாள். தமிழ் படங்களில் ஓடிபோகும் காட்சிகள் அனைத்தும் கோர்வையாய் அவள் சிந்தனையில் ஓடின.

மோகனுக்கு ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. இதய துடிப்பு அதிகரித்தது. மறுபடியும் ஃபோன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. தொடர்ந்தாற்போல் 27 மிஸ்ட் கால்ஸ் கொடுத்தாள். கடைசியாக ஒரு குறுந்தகவல் அனுப்பினாள்.

“நான் செத்தாகூட உனக்கு கவலையில்ல,” என்று அனுப்பிவிட்டு அனாந்து படுத்தபடி இருந்தாள். அப்படியே தூங்கிவிட்டாள். அன்று முழுதும் சாப்பிடவில்லை. இரவு ஆனது. சொந்தக்காரர்கள் கூட்டம் இன்னும் அதிகமானது. அந்த நெரிசலிலும் எப்படியோ ஓடி ஒளிந்து மொட்டை மாடிக்கு சென்றாள். கைகளை கட்டியவாறு மறுபடியும் சிந்தனை ஓடியது. மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தாள்.

rsz_wedding-rings

யாரோ ஒருவரின் கை அவள் தோள்பட்டையை தொட்டது. திரும்பி பார்த்தாள் சஷித்தா.

“மாப்பிள்ளையா அழகா எவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருந்தேன் இன்னிக்கு. நீ ஒன்னுமே சொல்லல!!” பெருமிதம் புன்னகையுடன் மோகன் கூறினான்.

சஷித்தா,”நமக்கு இந்த கல்யாணம் வேண்டாம்!!” என அவனை இறுக்க கட்டிபிடித்து கொண்டாள்.

அவன் ஆச்சிரியத்துடன், “ஏன்? என்ன ஆச்சு பேபி மா?”

அவள், “தெரியல. ஏதோ பயமாக இருக்கு. மனசு ஒரு மாதிரியா இருக்கு”

அவன் புன்னகையித்து கொண்டு, “என்ன பயம்?”

சஷித்தா, “பயம் என்ன புயலா? புதுசா பெயர் வைக்க?”

அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

சஷி, “சிரிக்காத நீ. உனக்கு இன்னிக்கு எத்தன மிஸ்ட் கால்ஸ், SMS அனுப்பியிருப்பேன்? ஏன் டா எடுக்கல?”

அவன், “சாரி பேபி மா. வீட்டுலே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். தம்பி இப்ப தான் எடுக்க போயிருக்கான்! ஆமா…எதுக்கு SMS, மிஸ்ட் கால்ஸ்?”

அவள், “உன்கிட்ட பேச தான்!”

அவளின் மனக்குழம்பங்களை புரிந்து கொண்டான் மோகன். அவளது முடி காற்றில் பறக்க, அதை காது மடல்கள் பின்னாடி அழகாய் ஒன்று சேர்த்தபடி, அவன், ” புரியுது பேபி மா உன் பயம். This is a huge thing. ஆயிரம் பேர் சுத்தி நின்னாலும், பயமா தான் இருக்கும். பெரிய responsibility. Life-changing moment. But you know what, we aren’t going to feel like that. நம்ம தான் இத பத்தி நிறைய பேசி இருக்கோமே. We are going to be the best of friends!”

அவளுக்கு சற்று குழம்பங்கள் நீங்கியது போல் தெரிந்தாலும் முழுதாய் சந்தோஷப்பட முடியவில்லை.

அவன் தொடர்ந்தான், “அந்த ஒரு பெரிய moment கடந்து போச்சுனு, that’s it! அவ்வளவு தான் மா. It’s easy. நான் தான் உன் பக்கத்துலே இருக்க போறேனே. அப்பரம் என்ன பயம். Cheer up பேபி மா!” என அணைத்தபடி நின்று கொண்டிருந்த சஷித்தா நெற்றியில் ‘இச்’ வைத்தான்.

அவன், “So…feeling better now?”

அவள், ” But..but…”

புருவங்களை சுருக்கி அவன் என்ன என்பதுபோல் தலை அசைத்து கேட்டான்.

அவள், ” சித்தி வந்து…இதுக்கே களைப்பா போனா எப்படி கல்யாணம் நைட் அப்பரம் எப்படினு சொல்லிட்டு நக்கலா சிரிச்சுட்டு போனாங்க. செம கடுப்பா இருந்துச்சு!” என்று கூறிவிட்டு எரிச்சல் அடைந்தாள்.

அவனும் விளையாட்டாய், “ஆமா ஆமா.. ரொம்ப சரி சித்தி சொன்னது. நீ அப்படிலாம் காரணம் சொல்ல முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன்!”

அவள் முறைத்தவாறு, “மேல கைய வச்சே, கொன்னுடுவேன்!” என்று அவனை தூர தள்ளிவிட்டாள்.

“எப்படி கொல்லுவே?” சில்மிஷ பார்வையுடன் கண் சிமிட்டினான்.

அவள், “உன்னைய, எனக்கு பிடிக்கல. போ டா!!!” என்று விளையாட்டாய் கூறி மறுபடியும் கட்டியணைத்து கொண்டாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s