This Valentine’s Day, we take a look back to pick out the most swoon-worthy lyrics from Kollywood films that hit the big screen last year. Scroll on to see if your romantic favourites made the list!

rsz_9m8whyxjfcm-brigitte-tohm

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

– குறுந்தொகை 40

கவிதைக்கும் காதலுக்கும் என்றுமே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால நவீன கவிதைகள்  வரை காதலை கருப்பொருளாக கொண்டு பல படைப்புகள் இயற்றப்பட்டுவருகின்றன. இவற்றை படைப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் என்றுமே சலிப்பு தட்டியதில்லை.

சென்ற ஆண்டில் நமது மனதிற்கு நெருக்கமான காதல் பாடல்களையும் அவற்றின் எழில் கொஞ்சும் வரிகளையும் காதலர் தின சிறப்பு தொகுப்பாக இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். பாடல் வரிகளில் உள்ள உணர்வுகளை, பாடல் காட்சிகளிலும் மனதை வருடும் இசையிலும் அழகாக  சித்தரித்துள்ளதே இப்பாடல்களின் சிறப்பாகும். படித்து, பாடி, கேட்டு, அன்பர் தினத்தை இன்பமாக கழியுங்கள்.

1. கொஞ்சி பேசிட வேணாம் (சேதுபதி)

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

ஆசை, வலையிடுதாம்; நெஞ்சம், அதில் விழுதாம்
எழுந்திடும் போதும் அன்பே, மீண்டும் விழுந்திடுதா
தனிமை, உன்னை சுடுதா; நினைவில், அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம், கூந்தல் மனம் வருதா

2. கண்ண காட்டு போதும் (ரெக்கை)

பாடலாசிரியர்: யுகபாரதி

நெஞ்சுல பூமழைய சிந்துற உன் நெனப்பு, என்னை தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு, குத்தி சாய்க்குதே
வக்கனையா நீயும் பேச, நான் வாயடைச்சே போகுறேன்
வெட்ட வெளி பாதை நானும், உன் வீட்டை வந்து சேருறேன்

3. உன் மேல ஒரு கண்ணு (ரஜினி முருகன்)

பாடலாசிரியர்: யுகபாரதி

சொல்லாம கொள்ளாம மூடி வைச்சு, என்னை –
அங்கேயும் இங்கேயும் அலையவிட்ட
அள்ளாம கிள்ளாம நோகவச்சு என்னை –
முன்னாலும் பின்னாலும் முனகவிட்ட

4. உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே (தெறி)

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இங்கே நான் வாழ வேண்டும்

5. நான் உன் அழகினிலே (24)

பாடலாசிரியர்: மதன் கார்கி

என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் காலவெளியில் கால்கள் பதித்து போவோம்

6. கருவக்காட்டுக் கருவாயா (மருது)

பாடலாசிரியர்: வைரமுத்து

கருவக்காட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா என்னை மூச்சுமுட்ட விடுவாயா
கால் வளர்ந்த மன்னவனே வா,
காவலுக்கு நின்னவனே வா வா

7. சிரிக்காதே (ரெமோ)

பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்

என் நெஞ்சின் தீயே; உள்ளெங்கும் நீயே
கண் மூடும் போதும், கண் முன் நின்றாயே
சிரிக்காதே, சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே

8. போன உசுரு வந்திருச்சு (தொடரி)

பாடலாசிரியர்: யுகபாரதி

உயிர் காதல் அடங்காது, நெருப்பாலும் பொசுங்காது
நடந்தாலே அது சுகம் தானே, துணையாக நானும் வருவேனே
சத்தியமா என் பக்கத்தில நீயிருந்தா அனலும் குளிரா மாறுமே
ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக்கடனும் தீருமே

9. சிறுக்கி வாசம் காத்தோட (கொடி)

பாடலாசிரியர்: விவேக்

உறுமும் வேங்க, ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட தர யோசிக்க மாட்டெனடி
பாக்காத பசி ஏத்தாத, இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே

10. தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா)

பாடலாசிரியர்: தாமரை

ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டின் சிறந்த பாடல் வரிக்கான விருதை இந்த பாடல் தட்டிச் சென்றது. மேலும், பாடலாசிரியர் தனது முத்திரையை இறுதி வரியில் சேர்த்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

எரியும் தீயில் எண்ணை நீயுற்ற நான் வந்து நீராடும் நீறுற்று
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றேன் நிலவே
கலாபம், போலாடும், கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி, உன்னை, தீண்டவே பார்த்தேன்; ஏனதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம், தர தாமதம் ஆகுதே; தாமரை வேகுதே

 

The team at ChutneySG wishes everyone a very Happy Valentine’s Day!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s